குறும்செய்திகள்

தொண்டமனாறு கடற்பரப்பில் 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது..!

Two arrested with cannabis in Thondamanaru

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Two arrested with cannabis in Thondamanaru

Related posts

இன்றும் நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகள் : பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு..!

Tharshi

புது வருடத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய நிதி சார்ந்த நடவடிக்கைகள்..!

Tharshi

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் அதிரடி கைது..!

Tharshi

Leave a Comment