குறும்செய்திகள்

ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் : 3 பொலிஸ் அதிகாரிகள் காயம்..!

Anti Lockdown Westminster protest Police officers hurt

லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொலிசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் உயர்ந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த குளிர்காலத்தில் ஊரடங்கு அறிவிக்க கூடும் என்று எச்சரித்ததை அடுத்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 10,633 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பாதிப்பை விட 37.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும், நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஒரு முக்கிய அறிகுறியாக தடுப்பூசிகள் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு இடையிலான தொடர்பை உடைத்து விட்டன.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து போரிஸ் ஜான்சன் அரசு ஜூலை 19 ஆம் திகதி ஊரடங்கை நீட்டித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிய பொது மக்கள் மற்றும் பொலிசார் சாலைகளில் கட்டி புரண்டு சண்டையிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் மீது டென்னிஸ் பந்துகளை ஏறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Anti Lockdown Westminster protest Police officers hurt

Related posts

29-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மீண்டும் இணையும் சுந்தர் சி – ஜெய் கூட்டணி..!

Tharshi

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் அதிரடி கைது..!

Tharshi

Leave a Comment