குறும்செய்திகள்

திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

Sivakasi newly wed woman Murdered

திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிவகாசி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரியார் காலனியில் திருமணமாகி 1 மாதமே ஆன பிரகதிமோனிகா (24) என்ற இளம்பெண் கடந்த 8 ஆம் திகதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக அதே தெருவில் எதிர் வீட்டில் வசித்துவரும் 2 இளைஞர்களிடம் பொலிசார் நேற்று இரவு விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

விசாரணையில், எதிர் வீட்டில் புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர் உள்ளதால், அவரிடம் நிறைய நகைகள் இருக்குமென அவர்கள் திட்டம் தீட்டி கொள்ளை அடிக்கச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் கொள்ளை அடிக்கச் சென்றபோது, மோனிகா நகையை விடாமல் தொடர்ந்து போராடியதால், ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவருடைய கழுத்தில் வெட்டியுள்ளனர்.

பின்னர் 1 பவுன் செயினை பறித்துக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி, வீட்டிற்கு சென்று நகை, அரிவாளை மறைத்து வைத்துவிட்டு வழக்கம்போல வெளியே சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இளைஞர்கள் 2 பேரையும், கொலை செய்ய உடந்தையாக இருந்த அவர்களில் ஒருவருடைய தாயையும் கைது செய்துள்ளனர்.

< Most Related News >

Tags :-Sivakasi newly wed woman Murdered

Related posts

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Tharshi

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

10 comments

Leave a Comment