குறும்செய்திகள்

21-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

21st July Today Raasi Palankal

இன்று ஜூலை 21.2021

பிலவ வருடம், ஆடி 5, புதன்கிழமை, 21.7.2021
வளர்பிறை, துவாதசி திதி மதியம் 2:57 வரை,
அதன்பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 5:39 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : பிரதோஷம், சிவன் வழிபாடு, பக்ரீத்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பணிச்சுமை குறையும். அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்ட நிலை மாறும்.
பரணி: குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்பட்டு மறையும். பொறுமை தேவை.
கார்த்திகை 1: நாவடக்கம் தேவை. மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்வீர்கள்.
ரோகிணி: நண்பர்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மிருகசீரிடம் 1,2: கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள்.
திருவாதிரை: வராது என்று நீங்கள் கைவிட்ட பணம் தானாக வந்து சேரும்.
புனர்பூசம் 1,2,3:மனதுக்குப் பிடித்த விருந்தினர்களின் வருகையால் மகிழ்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம்4: புதிய தீர்மானம் மூலம் நிம்மதிக்கு வழிவகை செய்வீர்கள்.
பூசம்: மனநிறைவுடன் இருப்பீர்கள். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
ஆயில்யம்: உற்சாகமான விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

சிம்மம் :

மகம்: அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் சோர்வு நீங்கும்.
பூரம்: மறைமுக விமர்சனம் எதிர்ப்பு வந்தாலும் பொறுமையால் வெல்வீர்கள்.
உத்திரம்1: வாகன வகையில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம். நண்பர்கள் உதவுவர்.

கன்னி:

உத்திரம்2,3,4: தாமதித்த பணிகளை இன்று முடிப்பீர்கள். உறவினால் நன்மை ஏற்படும்.
அஸ்தம்: உழைப்புக்கான ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.
சித்திரை 1,2:சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். குடும்பத்தினரால் ஆறுதல் பெறுவீர்கள்.

துலாம்:

சித்திரை, 3,4: அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். நீண்டகால நண்பரைச் சந்திப்பீர்கள்.
சுவாதி: விலகிச் சென்ற அக்கம்பக்கத்தினர் நெருங்கி வருவர். பிள்ளைகளால் நன்மையடைவீர்கள்.
விசாகம் 1,2,3: குடும்பத்தினருக்காகச் செய்யும் தியாகத்துக்குப் பாராட்டு எதிர்பார்க்க வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம்4: தாழ்வு மனப்பான்மை நீங்கும். முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம்: தெளிவாகப் பேசி உங்களைப் புரிய வைப்பீர்கள். உடல்நலம் மேம்படும்.
கேட்டை: சவால்களை முயன்று முடிப்பீர்கள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

தனுசு:

மூலம்: பெரியவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். விடாமுயற்சியால் வெல்வீர்கள்.
பூராடம்: பணப் பற்றாக்குறை ஏற்படலாம். உறவினர்களின் உதவியை நாடுவீர்கள்.
உத்திராடம்1: வெளிநாட்டிலிருந்து மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
திருவோணம்: உங்களுக்குப் போட்டியாக உள்ளவர்களின் எதிர்ப்பு நிலை மாறும்.
அவிட்டம்1,2: நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும்.

கும்பம்:

அவிட்டம், 3,4: முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி பிரச்னையிலிருந்து மீள்வீர்கள்.
சதயம்: உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
பூரட்டாதி1,2,3: குடும்பத்தினர் ஒத்துழைப்பர். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
உத்திரட்டாதி: பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டு.
ரேவதி: திறமையை வெளிப்படுத்தி போட்டிகளை எதிர்கொள்வீ்ர்கள்.

21st July Today Raasi Palankal

Related posts

விரைவில் விற்பனைக்கு வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Tharshi

உங்களுக்கு காது செவுடா..? : கணவனுக்கு வந்த சோதனை..!

Tharshi

உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது : சந்தேகத்தை உண்டாக்கும் புதிய அறிக்கை..!

Tharshi

Leave a Comment