குறும்செய்திகள்

22-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd July Today Raasi Palankal

இன்று ஜூலை 22.2021

பிலவ வருடம், ஆடி 6, வியாழக்கிழமை, 22.7.2021
வளர்பிறை, திரயோதசி திதி மதியம் 12:41 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம் மாலை 4:12 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : குருவாயூரப்பன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பார்த்த விஷயத்தில் தாமதம் ஏற்படலாம். உடல்நிலை சீர்படும்.
பரணி: பணிகளில் உற்சாமுடன் ஈடுபடுவீர்கள். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பணவிஷயத்தில் கவனம் தேவை. பொறுமை காப்பது நல்லது.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4:வெளியாட்களை நம்பாதீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
ரோகிணி: திருமணம் பற்றிய பயம் வேண்டாம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும்.
மிருகசீரிடம் 1,2: பொது சேவைகளில் ஈடுபாடு கொள்வீ்ர்கள். புகழ் மேலோங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பொழுது போக்குகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். சுகமான நாள்.
திருவாதிரை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
புனர்பூசம்: 1,2,3: உழைப்புக்கேற்ற நற்பலன் கிடைக்கும். நண்பரால் உதவியுண்டு.

கடகம்:

புனர்பூசம்4: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும்.
பூசம்: எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் நினைத்ததை விடச் செலவு குறையும்.
ஆயில்யம்: புத்திசாலித்தனமான செயல்களால் மற்றவர்களைக் கவர்வீர்கள்.

சிம்மம் :

மகம்: அழகுணர்ச்சி அதிகரிக்கும். பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
பூரம்: விறுவிறுப்பான நாள். ஆதாயம் கிடைக்கும். வீண்பயம் அகலும்.
உத்திரம்1: நண்பர்கள் மூலம் சந்தோஷ செய்தி வரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி:

உத்திரம்2,3,4: மற்றவர்களால் முடியாத விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள்.
அஸ்தம்: அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த நன்மை தாமதமாக நடக்கும்.
சித்திரை 1,2: வீடு கட்டுவதில் வாங்குவதில் இருந்த தடங்கல் மறையும்.

துலாம்:

சித்திரை 3,4: சொத்து சேர வாய்ப்புண்டு. நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
சுவாதி: அடுத்தவரின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்
விசாகம் 1,2,3: சகோதரர்களால் நன்மை காண்பீ்ர்கள். சுபவிஷய பேச்சு நடக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4:கற்பனை பயத்தைக் கைவிட்டு முக்கிய முடிவெடுக்கும் நாள்.
அனுஷம்: முன்யோசனையுடன் நடந்துகொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை: உங்களை எதிரியாக நினைத்தவர்களை முறியடித்து முன்னேறுவீர்கள்.

தனுசு:

மூலம்: பிள்ளைகளால் பெருமை சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பூராடம்: விருப்பம் ஒன்று நிறைவேறும். மனதில் நிம்மதி நிலவும்.
உத்திராடம்,1: பொருளாதார நெருக்கடி குறையும். மன நிறைவான நாள்.

மகரம் :

உத்திராடம்2,3,4: குடும்பத்தில் கலகலப்பு உருவாகும். நிம்மதி நீடிக்கும்.
திருவோணம்: சங்கடம் தீர்ந்து நிம்மதி காண்பீர்கள். கடன்தொல்லை அகலும்.
அவிட்டம் 1,2: தடைகள் குறுக்கிட்டாலும் முயற்சிக்கான பலன் கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம். பணியில் அலட்சியம் வேண்டாம்.
சதயம்: வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீ்ர்கள். மனக்கவலை தீரும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஒருவருக்குத் திருமணப் பேச்சு நல்லபடியாக முடிவுக்கு வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: மற்றவர் குற்றத்தை மன்னித்துப் பெருந்தன்மையுடன் நடப்பீர்கள்.
உத்திரட்டாதி: தடைப்பட்ட நல்ல விஷயம் மீண்டும் தொடரும். அமைதியான நாள்.
ரேவதி: கவலை ஒன்று வந்து போகும். கடின உழைப்பால் நன்மை அடைவீர்கள்.

22nd July Today Raasi Palankal

Related posts

வேலைக்காரி குளிக்கும் போது எட்டிப் பாத்தீங்களாமே..!

Tharshi

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்ப்பவை..!

Tharshi

நாட்டில் இன்று 2,792 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment