குறும்செய்திகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா..!

Canada Open Border to Vaccinated foreigners

செப்டம்பர் 7 ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, கனடா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்..,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி முதல் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 7 ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்கவுள்ளது.

Canada Open Border to Vaccinated foreigners

Related posts

டெல்லியில் தீ விபத்து : 5 துணிக்கடைகள் எரிந்து நாசம்..!

Tharshi

இந்தோனேசியாவில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 35,764 பேர் பாதிப்பு..!

Tharshi

யாழில் திருமணமாகி சில மாதங்களில் இளம் பெண் தற்கொலை..!

Tharshi

Leave a Comment