குறும்செய்திகள்

13-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

13th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 13.2021

பிலவ வருடம், ஆடி 28, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை, பஞ்சமி திதி மதியம் 2:29 வரை,
அதன்பின் சஷ்டி திதி, அஸ்தம் நட்சத்திரம் காலை 9:26 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : கருட பஞ்சமி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பலகாலமாக மனதில் இருந்த திட்டம் வெற்றி பெறும் நாள்.
பரணி: நண்பர்களின் ஆதரவு கிட்டும். எதிர்க் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கார்த்திகை 1: ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் இனி மாறும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: இனிய அனுபவம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.
ரோகிணி: எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் புதிய மாற்றம் உண்டு.
மிருகசீரிடம் 1,2: வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நட்பு வட்டம் விரிவடையும். பல நாள் உறுத்தல் தீரும்.
திருவாதிரை: நீங்கள் எடுத்த முயற்சி ஒன்று நல்ல பலன் தரும்.
புனர்பூசம் 1,2,3: காலை நேரத்திலேயே பொருள் வரவு உண்டு. மகிழ்ச்சி கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: செல்வாக்கு மிக்க ஒருவரின் சந்திப்பைத் தவிர்க்கப் பாருங்கள்.
பூசம்: பணத்தைப் பெருக்குவதில் நாட்டம் அதிகரிக்கும் நாள்.
ஆயில்யம்: காலையில் வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

சிம்மம் :

மகம்: முக்கியமான நபர் ஒருவரை சந்திப்பதால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரம்: தன்னம்பிக்கையோடு செயல்பட்டு தடைகளை அகற்றி முன்னேறுவீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தில் முன்பு ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: விட்டுப்போன வியாபாரப் பேச்சு மீண்டும் தொடரலாம்.
அஸ்தம்: வருமானம் பற்றிய கவலை தீரும். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும்
சித்திரை 1,2: கனவுகளை நனவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் ஒருவருக்குத் திருமண முயற்சி வெற்றி பெறும்.
சுவாதி: யோகமான நாள். நினைத்ததைச் செய்து முடிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரலாம்.
அனுஷம்: சச்சரவுகள் அகன்று சமாதானம் ஏற்பட்டு நிம்மதி பெறுவீர்கள்.
கேட்டை: மனதில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு:

மூலம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் நலம் சீராக இருக்கும்.
பூராடம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கலாம்.
உத்திராடம் 1: மனஅமைதி குறையாமல் இருக்க அனுசரித்து செல்வது நல்லது.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்களது வழிபாட்டு முறைகளை மாற்ற வேண்டாம்.
திருவோணம்: நிம்மதி கூடும். மாறுதல்கள் இன்றி வழக்கப்படியான நாள்.
அவிட்டம் 1,2: விரயங்கள் சற்றே கூடும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வீடு மாற்றம் பற்றி இப்போதைக்கு திட்டம் வேண்டாம்.
சதயம்: அலைச்சல் அதிகரிக்கலாம். பணியில் கவனக்குறைவு வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்கள் யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: திறமைகளை வெளிப்படுத்த தவற வேண்டாம். புதிய வாய்ப்பு வரும்.
உத்திரட்டாதி: பணிகளில் சிறு தடை, தாமதங்களைச் சந்திக்க நேரிடும்.
ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடிவரும். வேலைப்பளு கூடும்.

13th August Today Raasi Palankal

Related posts

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..!

Tharshi

இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் : இன்று ஆரம்பம்..!

Tharshi

10-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment