குறும்செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என தெரியுமா..!

Bigg Boss Season 5 Contestants

பிரபல தமிழ் தொலைக்காட்சியில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால், விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும், கொரோனா 2-ம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை. எனினும், விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Season 5 Contestants

Related posts

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

13க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் கிளீனர்கள் கொன்று புதைத்த பிரபல தாதா உள்பட 12 பேருக்கு தூக்குத் தண்டனை..!

Tharshi

ரொனால்டோவுக்கு கிடைத்த பேரதிஷ்டம்..!

Tharshi

Leave a Comment