குறும்செய்திகள்

ஆவணி மாதத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டிய 5 ராசிகள்..!

August Raasi palan these Raasi will get some bad effects

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியவர். சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆவணி மாதமாகும்.

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்கிழமை சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழைகிறார். இந்த ஆவணி மாதத்தில் சூரியக் கடவுளின் சுப ஸ்தானமான சிம்மத்தில் இருப்பதால், சில ராசியினருக்கு பெயர்-புகழ் மற்றும் சிறப்பான பல பலன்களைத் தருவார்.

இதனால் சூரியன் தனது அமைப்பைப் பொறுத்து 5 ராசிகளுக்கு சில பிரச்னைகள், மோசமான பலன்களைத் தரக்கூடும்.

கடகம் : கடக ராசிக்கு இந்த ஆவணி மாதத்தில் வாழ்க்கையில் இருக்கும் சில சச்சரவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை இருக்கும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவ முடியாமல் போகலாம். உங்கள் துணை உட்பட உங்களுக்கு நெருங்கிய உறவுகளைப் புண்படுத்த நேரிடும்.

இந்த மாதத்தில் சில நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம். உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப செலவு செய்வதோடு, சேமிப்பது அவசியம்.

உங்கள் பிரச்சினைகளிலிருந்து மீள் ஆதித்யாஹிருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.

கன்னி : ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் ஆளுமைத் தரக்கூடிய சூரியன் அமைந்திருப்பதால், சில பாதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொழில் ரீதியான பெரிய முன்னேற்றம் இல்லாமல், சில இழப்பு ஏற்படலாம். வியாபாரிகள் நீங்கள் விற்பனை செய்த பொருட்களில் குற்றம் ஏற்படலாம். பொருள் திரும்பி வரலாம்.

பணியாற்றும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு சில பயணங்களால் தேவையற்ற உடல் அசதி, அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் ஈடேறக் கடின உழைப்பு தேவைப்படும். காதல் உறவில் கவனம் தேவை.

முக்கிய விஷயமாக, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன், சிவப்பு நிற கைக்குட்டையை உங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதால் நற்பலன் ஏற்படும்.

விருச்சிகம் : செவ்வாய் ஆளக்கூடிய விருச்சிக ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் அதே சமயம் நீங்கள் சில தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.

இந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத சில விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதுவே உங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.

உங்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்களின் நிதி நிலை இயல்பாக இருக்கும். நீங்கள் அதிகமாக பெறவோ, இழக்கவோ மாட்டீர்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்குச் சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யுங்கள்.

கும்பம் : கும்ப ராசிக்கு 7ம் இடமான தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருப்பதால் உங்களுக்கு இந்த ஆவணி மாதம் கலவையான பலன்கள் ஏற்படும்.

சூழல் காரணமாக திடீர் முடிவுகள் எடுப்பதோடு, அது சாதக – பாதகம் தெரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உங்களை மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவர்.

அந்த நேரத்தில் சற்று பொறுமையாக இருந்து உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடியுங்கள்.

மீனம் : சூரியனின் அமைப்பு மீன ராசிக்கு இனிமையான பலன் கிடைப்பது கடினம். சில நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். உங்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடும், உடல் நிலையில் கவனமும் தேவை.

வாயுத்தொல்லை, வயிற்றில் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது அவசியம். ஞாயிற்றுக்கிழமை கோவிலில் வெல்லம் தானம் செய்வது சுபமான பலனைத் தரும்.

August Raasi palan these Raasi will get some bad effects

Related posts

என்னுடைய கட்சிப் பணியை யாராலும் தடுக்க முடியாது : சசிகலா..!

Tharshi

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்..!

Tharshi

பிரைவசி பாலிசி விவகாரத்தில் அப்படி செய்ய மாட்டோம் : வாட்ஸ்அப் அளித்த விளக்கம்..!

Tharshi

Leave a Comment