குறும்செய்திகள்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம்..!

Schools to be reopened

ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில், நாடு முழுவதும் உள்ள 200 க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர், அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமென முன்னதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Schools to be reopened

Related posts

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் : 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!

Tharshi

சன் டிவி சீரியல் நடிகை பிரபல நடிகரின் மகளா..!

Tharshi

சாலையில் சேகரிக்கும் குப்பைகள் – வீட்டை திறந்தால் கொட்டிக் கிடக்கும் பணம் : அதிர்ச்சிக்குள்ளாக்கிய சகோதரிகள்..!

Tharshi

Leave a Comment