குறும்செய்திகள்

01-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

1st Octber Today Raasi Palankal

இன்று அக்டோபர் 01.2021

பிலவ வருடம், புரட்டாசி 15, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, தசமி திதி இரவு 8:27 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1:24 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சுபநிகழ்ச்சிகள் சின்ன நெருக்கடிக்கு பிறகு உறுதியாகும்.
பரணி: பல நாள் கழித்து உறவினர்களை சந்தித்து பேசி மகிழ்வீர்கள்.
கார்த்திகை 1: எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு வேலை கைக்கு எட்டக்கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியில் இருக்கும் அழுத்தங்கள் விலகி நிம்மதி வரும்.
ரோகிணி: எந்த நன்மையுமே சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் அமைதி நிலவும். நிம்மதியான நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பாலினத்தினரால் நன்மை பெற வாய்ப்பு உள்ளது.
திருவாதிரை: எதிர்பார்த்த விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.
புனர்பூசம் 1,2,3: பணத்தேவைகளை நிறைவு செய்ய கூடுதலாக உழைப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும்.
பூசம்: அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். கவலை ஒன்று தீரும்.
ஆயில்யம்: திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்டம் வரும்.

சிம்மம் :

மகம்: பணிச்சுமை காரணமாக பிறரிடம் கடுமை காட்ட வேண்டாம்.
பூரம்: கலைகளில் ஆர்வம் மேலோங்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டு.
உத்திரம் 1: சுபச்செலவுகள் ஏற்படும். வெளியூர் செல்வீர்கள். கவலை தீரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பலநாள் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும்.
அஸ்தம்: உங்களது முயற்சிகளில் படிப்படியான சீரான வளர்ச்சி கிடைக்கும்.
சித்திரை 1,2: பலரும் போற்றும் செயல் செய்து பெருமிதம் அடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: உங்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் பலன் அடைவார்கள்.
சுவாதி: உடன்பிறந்தோரின் பிரச்சினையை கேட்டுத் தீர்வு சொல்வீர்கள்.
விசாகம் 1,2,3: பொழுதுபோக்கில் கவனம் சென்றாலும் கடமையை கவனிப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவருக்கு உதவி செய்வதற்காக சிறிது விட்டுக்கொடுப்பீர்கள்.
அனுஷம்: கடுமையான குணங்களை கைவிடுவது மிகவும் நல்லது.
கேட்டை: ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து நிம்மதி ஏற்படும். லாபமான நாள்.

தனுசு:

மூலம்: எந்த விஷயத்தை செய்வதிலும் பதற்றமோ, அவசரமோ வேண்டாம்.
பூராடம்: தடைகள், தாமதங்கள் பற்றி மனஅழுத்தம் வேண்டாம்.
உத்திராடம் 1: குடும்பங்களை சேர்த்து வைக்க முயன்று வெல்வீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: அலுவலகப் பணியைப் பகிர்ந்து முடிக்க வேண்டி வரலாம்.
திருவோணம்: சுபவிஷயத்தின் பொருட்டு துாது செல்வீர்கள்.
அவிட்டம் 1,2: பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: விரைந்து முயன்றாலும் பலன்கள் கிடைக்க தாமதமாகும்.
சதயம்: கவனமாக செய்யும் விஷயங்கள் நிச்சயமாக பிரச்சினையின்றி முடியும்.
பூரட்டாதி 1,2,3: நெருங்கிய உறவினர் வீட்டில் நன்மை நிகழும்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பாலினத்தினர் மூலம் உதவிகள் கிடைத்து பயன் அடைவீர்கள்.
உத்திரட்டாதி: மற்றவர் பிரச்சினைகளைப் பேசி மத்யஸ்தம் செய்வீர்கள்.
ரேவதி: நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

1st Octber Today Raasi Palankal

Related posts

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

Tharshi

இலங்கை குரங்குகளுக்கு அமெரிக்காவிலும் கிராக்கி..!

Tharshi

04-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment