குறும்செய்திகள்

வலிமை படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Valimai Movie Release Date Announced

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “வலிமை” படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித்தின் 60 வது படம் “வலிமை”. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Valimai Movie Release Date Announced

Related posts

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Tharshi

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 118 ரன்கள் பெற்ற இங்கிலாந்து..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை..!

Tharshi

Leave a Comment