குறும்செய்திகள்

20-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

20th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 20.2021

பிலவ வருடம், ஐப்பசி 3, புதன்கிழமை,
தேய்பிறை, பவுர்ணமி திதி இரவு 8:54 வரை,
அதன்பின் பிரதமை திதி, ரேவதி நட்சத்திரம் மதியம் 3:19 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : பவுர்ணமி, சத்யநாராயண பூஜை.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தடை ஒன்று நீங்கி வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
பரணி: மகிழ்ச்சி கூடும். தேவையற்ற கற்பனை பயங்கள் நீங்கும்.
கார்த்திகை 1: பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசாங்க நன்மை வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குழந்தைகள் செய்யும் செயலால் பெருமிதம் அதிகரிக்கும்.
ரோகிணி: பெற்றோரும், உடன்பிறப்புகளும் உங்களுடன் பிரியமாக இருப்பர்.
மிருகசீரிடம் 1,2: கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கங்களை விலக்குங்கள்.
திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: சந்தோஷ வாய்ப்புகள் வந்துசேரும். பதவி உயரும்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களின் மூலம் நிம்மதி கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டு.
பூசம்: வெற்றி ஏற்பட்டு பெருமை சேரும்நாள். பாக்கிகள் வசூலாகும்
ஆயில்யம்: வாய்ப்பு ஒன்று தட்டிப்போகலாம். மனதில் திருப்தி நிலவும்.

சிம்மம் :

மகம்: மனு செய்திருந்த கடனுக்கு அனுமதி கிடைத்து மகிழ்வீர்கள்.
பூரம்: எது செய்தாலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
உத்திரம் 1: விரோதம் அதிகரிக்காமல் அமைதியுடன் பேசுங்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றைச் செய்வீர்கள்.
அஸ்தம்: பல கால பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
சித்திரை 1,2: உறவினர்கள், நண்பர்கள் இடையே உங்களின் அந்தஸ்து உயரும்.

துலாம்:

சித்திரை 3,4: முன்பு செய்த முயற்சிகளுக்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும்.
சுவாதி: மனதில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தடுமாற்றம் ஒன்று நீங்கும்.
விசாகம் 1,2,3: நவீனப் பொருட்கள் வாங்குவீர்கள். சிறந்த உணவு கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்க்கைத்துணையால் சிறு சிறு செலவுகள் இருக்கும்.
அனுஷம்: விருந்துக்குச் செல்வீர்கள். சகோதர, சகோதரிக்கு நன்மை உண்டு.
கேட்டை: துணிச்சலான செயல் ஒன்றால் நிறைவான பலன் காண்பீர்கள்.

தனுசு:

மூலம்: நெருங்கிய நண்பர் கைகொடுப்பதால் பணி ஒன்று நிறைவாகும்.
பூராடம்: உங்களின் புகழ் கூடுதலாகும். சொத்து வாங்கும் வாய்ப்பு வரும்.
உத்திராடம் 1: கலைஞர்கள் ஏற்றம் அடைவர். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தேவையற்ற கோபம் காரணமாக நல்லவர் நட்பை இழக்க வேண்டாம்.
திருவோணம்: இன்று சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்
அவிட்டம் 1,2: பணத்தையும், வார்த்தைகளையும் கவனமாகக் கையாளுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முயற்சிகளில் சுமாரான வெற்றியைத்தான் எதிர்பார்க்கலாம்
சதயம்: சிறு ஆதாயம் உண்டு. பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பது பற்றி உறுதி கொள்ளுங்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: புகழ் பெறுவீர்கள். நெருங்கியவர்களால் ஏற்பட்ட கவலை தீரும்.
உத்திரட்டாதி: எதிர்பாராத நன்மையும் லாபமும் உங்களைத் தேடி வரும்.
ரேவதி: பணியும் அதிகரித்து அதன் மூலம் வருமானமும் கூடும்.

20th October Today Raasi Palankal

Related posts

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் அதிரடி கைது..!

Tharshi

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : இதுவரை 14 பேர் மரணம் – 2 பேரை காணவில்லை..!

Tharshi

06-01-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment