குறும்செய்திகள்

04-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

04th November Today Raasi Palankal

இன்று நவம்பர் 04,2021

பிலவ வருடம், ஐப்பசி 18, வியாழக்கிழமை,
வளர்பிறை, அமாவாசை திதி நள்ளிரவு 3:51 வரை,
அதன்பின் பிரதமை திதி, சித்திரை நட்சத்திரம் காலை 8:09 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : தீபாவளி (அதிகாலை 5:00 – 5:30 மணி நீராடலாம்)

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உறவினர் சந்திப்பு உண்டு. நல்லவர் உதவியால் நல்ல பலன் பெறுவீர்கள்.
பரணி: அலைச்சலுக்கேற்ற பலன் உண்டு. காலையில் நல்ல செய்தி வந்து சேரும்.
கார்த்திகை 1: புதிய விஷயம் ஒன்றை பற்றிய முயற்சியில் நம்பிக்கை ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: திருப்தியான நாள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
ரோகிணி: தீயவழியில் அழைத்துச் செல்லும் நண்பர்களை விலக்குங்கள்.
மிருகசீரிடம் 1,2: உடல் ஆரோக்கியம் மேம்படும். கலகலப்பும் சந்தோஷமும் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருப்பதால் அவர்களின் ஆசி உண்டு.
திருவாதிரை: தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உற்சாகமான நாள்.
புனர்பூசம் 1,2,3: காத்திருந்த நல்ல வாய்ப்பு ஒன்று உங்களை தேடிவரும் நாள்.

கடகம்:

புனர்பூசம் 4: பாராட்டுகள் கிடைக்கும். கவலையில் இருந்து மீளுவீர்கள்.
பூசம்: பரபரப்பாக செயல்பட்டு மன நிறைவடைவீர்கள். மாலையில் மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: உங்களுடைய பொறுமைக்கு பலன் உண்டு. நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம் :

மகம்: நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். உங்களின் மரியாதை உயரும்.
பூரம்: பாராட்டு கிடைக்கும். உங்களின் பெருந்தன்மை அதிகரிக்கும்.
உத்திரம் 1: முயற்சி ஒன்று நீங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். நிம்மதி அடைவீர்கள்.
அஸ்தம்: வெளிநாட்டில் உள்ளவர்கள் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள்.
சித்திரை 1,2: தன்னம்பிக்கை துளிர்விடும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: நண்பர் ஒருவரின் செய்கை உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சுவாதி: சிலருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு இன்று மறையும்.
விசாகம் 1,2,3: செலவுகள் செய்வதால் நன்மைகள் சிறிதளவு கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பம் சம்பந்தமான நிகழ்வில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம்: தன்னம்பிக்கை அதிகரித்து அது செயல்களில் வெற்றி தரும்.
கேட்டை: கூடுதல் முயற்சியால் நல்ல முன்னேற்றத்தை ஒரே நாளில் காண்பீர்கள்.

தனுசு:

மூலம்: உடன்பிறந்தோருடன் இருந்து வந்த பகை மாறும். உழைப்பை நம்புங்கள்.
பூராடம்: உள்ளன்போடு பழகியவர்கள் கைகுலுக்க முன் வருவார்கள்.
உத்திராடம் 1: தாழ்வுமனப்பான்மை தலைதுாக்க அனுமதிக்காதீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பிறருக்கு கொடுத்த வாக்கை பாடுபட்டு காப்பாற்றுவீர்கள்
திருவோணம்: நல்ல மாற்றம் உண்டாகும். உள்ளத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
அவிட்டம் 1,2: நலம்விரும்பிகளின் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: அக்கம் பக்கத்து வீட்டாருடன் நல்லுறவு ஏற்படும்.
சதயம்: உழைப்பினால் ஏற்றம் உண்டு. விருப்பம் ஒன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1,2,3: பாராட்டுக் கிடைக்கும். கர்வம் அதிகரிக்காமல் கவனம் தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: பணியிடத்தில் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
உத்திரட்டாதி: கோபமும், அதிகாரமும் அதிகமாகாமல் கவனம் தேவை.
ரேவதி: உங்கள் வார்த்தைகளால் ஒருவருக்கு நன்மை உண்டாகும்.

04th November Today Raasi Palankal

Related posts

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Tharshi

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் : தம்பதியினர் கைது..!

Tharshi

நீர்கொழும்பு கடற்கரை பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு..!

Tharshi

Leave a Comment