குறும்செய்திகள்

ஜேர்மனியில் முடிவுக்கு வந்தது டெலிகிராம் யுகம்..!

ஜேர்மனியில் டெலிகிராம் யுகம் முடிவுக்கு வந்தது.

முன்பெல்லாம், அதாவது இப்போது போல மொபைல் போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது, அவசர செய்திகளை அனுப்ப டெலிகிராம் அல்லது தந்தி என்னும் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில நாடுகளில் யாருக்காவது தந்தி வந்துள்ளதாக தெரியவந்தால் அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள். அதற்குக் காரணம், வெளிநாடுகள் அல்லது வெளி ஊரிலிருந்து இறப்புச் செய்திகளை உடனடியாக தெரிவிக்க தந்திகளை அனுப்புவார்கள். ஆகவே, தந்தி வந்தாலே யாரோ இறந்து விட்டார்களோ என மக்கள் அஞ்சுவதுண்டு.

பிறகு, திருமணங்களுக்கு வாழ்த்துச் செய்தி சொல்வதற்குக் கூட தந்திகள் அனுப்பத் தொடங்கினார்கள்.

பின்னர் மொபைல் போன்கள் புழக்கத்துக்கு வந்ததால், சில நாடுகளில் தந்தி மட்டுமல்ல, தபால் மூலம் செய்தி அனுப்புவது கூட குறையத் தொடங்கி விட்டது.

தற்போது, ஜேர்மனியில் டெலிகிராம் அல்லது தந்தி சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, தந்தி அனுப்புவதற்கான கட்டணமும் அதிகம்தான். 160 வார்த்தைகள் கொண்ட ஒரு செய்தியை தந்தி மூலம் அனுப்ப சுமார் 12.57 யூரோக்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 2,800 ரூபாய்) செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தவறாக பேசியதால் வாலிபரை வெட்டிக்கொன்று கடலில் வீசிய நண்பன்..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது..!

Tharshi

Leave a Comment