குறும்செய்திகள்

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Bigg Boss 4 Shilpa Manjunath Confirmed for 1 Crore

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடாத்தப்பட்டு வரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியானது நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், விரைவில் “பிக்பாஸ் 4” தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், ஒரு கோடி ரூபாய்க்கு “பிக்பாஸ் 4” நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் தொலைக்காட்சியிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கு முன்னர், நடிகைகளான அதுல்யா மற்றும் சுனைனா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த தகவல் பொய்யானது என அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்,

இந்நிலையில், சின்னத்திரை நடிகையான ஷிவன்யா நாராயனன், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொள்வதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதாகவும் இன்னொரு பக்கம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எது எவ்வாறிருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சியினை பொறுத்தவரை, நிகழ்ச்சி ஆரம்பிக்கும் கடைசி வாரம் வரையும் சஸ்பென்ஸ் இருந்த வண்ணமே இருக்கும். சரி நாமும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே, இந்த பிக்பாஸ் 4 சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டு கலக்கப் போகின்றார்கள் என்று.

< Most Related News >

Tags :-Bigg Boss 4 Shilpa Manjunath Confirmed for 1 Crore

 

 

Related posts

Xbox One to launch in China this month after all

Tharshi

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் : எம்.ஏ.சுமந்திரன்..!

Tharshi

சிறுவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் வழிமுறைகள்..!

Tharshi

41 comments

Leave a Comment