குறும்செய்திகள்

13-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 13,2023

சுபகிருது வருடம், மார்கழி 29, வெள்ளிக்கிழமை, 13.1.2023,
தேய்பிறை சஷ்டி திதி மதியம் 3:00 மணி வரை,
அதன்பின் சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் மதியம் 1:52 மணி வரை
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:31 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : சஷ்டி விரதம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வர்.
பரணி: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினர் ஆதரவுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
ரோகிணி: பெரியோர் வழியே நல்ல செய்தி வரும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும்.
மிருகசீரிடம் 1, 2: கடனாக கேட்டிருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். ஒரு செயல் லாபமாகும்.
திருவாதிரை: பிரபலங்களின் ஆதரவுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும்.
பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: மனதில் லாப சிந்தனை மேலோங்கும். அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம் :

மகம்: மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்ட செயல் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
பூரம்: உங்கள் நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். எதிர்பாராத வருமானம் உண்டு.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
அஸ்தம்: உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சித்திரை 1, 2: பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நிதி நிலை உயரும்.

துலாம்:

சித்திரை 3, 4: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகளில் எச்சரிக்கை தேவை.
சுவாதி: தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
விசாகம் 1, 2, 3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக செலவுகள் செய்வீர்கள். மனதில் நிம்மதி கூடும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். எதிர்பார்த்த்த செய்தி வரும். நிதிநிலை உயரும்.
அனுஷம்: குடும்ப நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

தனுசு:

மூலம்: கடவுள் வழிபாட்டில் உங்கள் மனம் செல்லும். வியாபாரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடுவீர்கள்.
பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்ய புதிய முதலீடு செய்வீர்கள். எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். பண வரவு மகிழ்ச்சி தரும்.
திருவோணம்: நேற்று வரை இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். நன்மையான நாள்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும்.
சதயம்: அமைதி காக்க வேண்டிய நாள். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். நிதானம் அவசியம்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பமடையும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:

பூரட்டாதி 4: நண்பர்கள் துணையுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரட்டாதி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும்.
ரேவதி: உங்கள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும்.

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்கு..!

Tharshi

கொவிட் தொற்றுடன் இலங்கையூடாக மதுரை சென்ற சீனர்கள்..!

Tharshi

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi

2 comments

Leave a Comment