குறும்செய்திகள்

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு : கைதாகிறார் இம்ரான் கான்..!

கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகலாம் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் இருந்த போது அவருக்கு எதிராக 24 எம்.பி க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. பதவி விலகினார்.

இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாயின. ஜாமின் கோரி லாகூர் ஐகோரட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று லாகூர் கோர்ட்டில் ஆஜரானார். இம்ரான் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி தாரிக் சலீம் ஷேக் விசாரணை நடந்து வரும் நிலையில் இம்ரான் கைதாகலாம் என கூறப்படுகிறது.

Related posts

பக்கவாதத்திற்கான நவீன சிகிச்சை முறைகள்..!

Tharshi

பாகிஸ்தானுடன் உறவை முறித்து எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா..!

Tharshi

செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை : கிளம்பிய கடும் எதிர்ப்பு – திரும்ப பெறப்பட்ட உத்தரவு..!

Tharshi

1 comment

Leave a Comment