குறும்செய்திகள்

பாகிஸ்தானுடன் உறவை முறித்து எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா..!

Saudi Arabia suspends crude oil and loan to Pakistan

பாகிஸ்தானின் நட்பு பட்டியலில் பல ஆண்டுகள் நிலைத்த சவுதி அரேபியா, தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி செய்தி நிகழ்ச்சியில் பேசிய பேச்சினால் கடுப்பாகி, பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் கடனாக வழங்கும் திட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நட்பின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பல்வேறு கடனுதவிகளையும், கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் ஒப்புதல் அளித்தார்.

அந்த வகையில், இன்றைய நிலவரப்படி பாகிஸ்தான் இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் எல்லை பிரச்சனையில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால் சவுதி அரேபியா அதற்கு செவி சாய்க்கும் நிலையில் இல்லை.

அதையடுத்து கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதியை மிரட்டும் தோணியில் கூறியதாவது..,

“காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் (சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு) இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.” எனக் கூறியுள்ளார்.

இந்த பேட்டி குறித்து அறிந்த சவுதி அரேபியா அரசு வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சு மிரட்டும் தொனியில் இருப்பதால், அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன் ஒரு வெளிப்பாடாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 2018-ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக இருக்கும் என பல அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

< Most Related News >

Tags :-Saudi Arabia suspends crude oil and loan to Pakistan

Related posts

சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

விற்பனையில் புது மைல்கல் எட்டிய சியோமி எம்ஐ 11 சீரிஸ்..!

Tharshi

எதிரிகள் சுற்றி வளைப்பு : போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை..!

Tharshi

Leave a Comment