சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் இடையே பல இடங்களில் துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவம் – துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் இதுவரை பொதுமக்கள் உள்பட 97 பேர் பலியாகி உள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால், இந்தியர்கள் அனைவரும் வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.