குறும்செய்திகள்

29-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 29.2021

பிலவ வருடம், புரட்டாசி 13, புதன்கிழமை,
தேய்பிறை, அஷ்டமி திதி மாலை 6:13 வரை,
அதன்பின் நவமி திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 10:07 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.
பரணி: குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும். அலுவலக பணிச்சுமை குறையும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும்.
ரோகிணி: வெளியூரில் உள்ள நெருங்கிய உறவினரிடம் இருந்து இனிய செய்தி வரும்.
மிருகசீரிடம் 1,2: புதிய பொருள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனக்கவலைகள் அகலும் நாள். நிதி நிலை திருப்தி தரும்.
திருவாதிரை: உடன்பிறந்தோர் உதவியை அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை.
புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த விஷயம் ஒன்றில் சாதகமான திருப்பம் உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: காலையிலேயே மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
பூசம்: நிம்மதி அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மகிழ்ச்சி தரும் நாள்.
ஆயில்யம்: பலநாள் தட்டிப்போய்க் கொண்டிருந்த நல்ல நிகழ்வு நடக்கும்.

சிம்மம் :

மகம்: எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
பூரம்: வீடு கட்ட, பழுதுநீக்க முற்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் 1: குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: கனவு நனவாகும். சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.
அஸ்தம்: பணியிடத்தில் முன்பு இருந்த சச்சரவு நீங்கி அமைதி நிலவும்.
சித்திரை 1,2: குடும்பத்தினரிடையே முன்பை விட ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும்.
சுவாதி: இளைஞர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
விசாகம் 1,2,3: உணவுக் கட்டுப்பாடு தேவை. பொழுதுபோக்கு அதிகமாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: தொடர்புகள் விரிவடையும். பணியிடத்தில் திசைத் திருப்பம் ஏற்படும்.
அனுஷம்: உங்களது செயல்கள் உங்களையே பாதிக்காமல் கவனமாயிருங்கள்.
கேட்டை: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை இருக்காது.

தனுசு:

மூலம்: கவனக்குறைவால் பிரச்னை ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
பூராடம்: புதிய நபர்களிடம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
உத்திராடம் 1: குடும்ப நபர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: முன்பு இருந்த மன உளைச்சல் குறைந்து நிம்மதி வரும்.
திருவோணம்: பணி பற்றிய சிறு பயணத்தால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் 1,2: வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிறரது செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
சதயம்: நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: தேவைக்கேற்ப பண உதவி கிடைக்கும். பேச்சில் கருணை தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். குழந்தைகளின் வாழ்வு செழிக்கும்.
உத்திரட்டாதி: தள்ளிப்போட்ட வேலைகள் இன்று நல்லபடியாக முடியும்.
ரேவதி: தேவையற்ற விவாதங்களில் இருந்து விலகி நிம்மதி காணுங்கள்.

29th September Today Raasi Palankal

Related posts

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்..!

Tharshi

பரந்தனில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை..!

Tharshi

04-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment