மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று 98 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3,113 கைதிகளை விடுவித்துள்ளதாக, இராணுவ அரசாங்கத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மியன்மார் இராணுவம் 2021 பெப்ரவரி மாதம் அதிகாரத்தை கைப்பற்றியது.
அன்றிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களையும் ஜனநாயக சார்பு ஆர்வலர்களையும் சிறையில் அடைத்துள்ளதுடன் கொடூரமான முறையில் எதிர்ப்புகளை அடக்கியது மற்றும் உலகளாவிய கண்டனத்தையும் பெற்றது.
இதேவேளை அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு மனித உரிமை அமைப்புகளும் பல உலகத் தலைவர்களும் இராணுவ ஆட்சிக்குழுவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.