குறும்செய்திகள்

சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

22 new cases of corona infection confirmed in China

சீனாவில், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்ட ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நேற்று முன்தினம் 21 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர 25 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,359 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

22 new cases of corona infection confirmed in China

Related posts

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi

இந்தியாவில் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா பாதிப்பு..!

Tharshi

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது..!

Tharshi

Leave a Comment