குறும்செய்திகள்

இந்தியாவில் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா பாதிப்பு..!

India reports less than 1lakhs Coronavirus cases

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், நேற்று காலை வெளியான தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 498 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 92 ஆயிரத்து 596 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 219 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் 63 நாட்களுக்கு பின்னர் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

India reports less than 1lakhs Coronavirus cases

Related posts

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை கொன்று வீசிய தாய்..!

Tharshi

மஞ்சள் பூஞ்சை நோய் யாரை எல்லாம் தாக்கும் தெரியுமா..!

Tharshi

10.08.2020 – இன்றைய ராசி பலன்கள்

Tharshi

Leave a Comment