குறும்செய்திகள்

2024 இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் டிரம்ப் விடுக்கும் அறிவிப்பு..!

Regarding the 2024 US presidential election Trump announced

2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டொனால்டு டிரம்ப்.

2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் ஒஹியோ மாகாணத்தில் இன்று ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.

அப்போது, “நான் வரும் 15 ஆம் திகதி செவ்வாய்கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் (பண்ணை வீடு) வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன்” என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் தான் போட்டியிடப்போவது குறித்து ஏதேனும் தகவலை டிரம்ப் வெளியிடுவாரா? அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் தான் மீண்டும் டுவிட்டரில் இணைவது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன.

இந்த கேள்விகளுக்கு வரும் 15 ஆம் திகதி பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Regarding the 2024 US presidential election Trump announced

Related posts

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரவுநேர ஊரடங்கு : வெளியான புதிய தகவல்..!

Tharshi

கழிவறைக்கு டிஷ்யூ பேப்பரை கையோடு கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள் : காரணம் இது தானாம்..!

Tharshi

14.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment