குறும்செய்திகள்

14.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

14th August Today Raasi Palankal

மேஷம்: வீட்டில் செய்யும் வழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி கூடும் நாள். உதவுவதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்க வாய்ப்புண்டு. செலவுகள் அதிகரிக்கக் கூடும். புதிய அறிமுகங்கள் நெருக்கமாவார்கள்.

ரிஷபம் : உறவினரால் நன்மை கிட்டும் நாள். முனைந்து உழைப்பதால் நலம் காண்பீர்கள். வாய்ப்புகள் கை கூடிவரும். சொத்துகள் வாங்குவதில் இருந்த பிரச்னை அகலும். வியாபார நுணுக்கத்தைக் கண்டறிவீர்கள்.

மிதுனம் : கணவரின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படும் நாள். அலுவலகத்தில் புகழ் கூடும். சில காலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும் அடையாளம் தெரியும்.

கடகம்: கலகலப்பான நாள். பதவி உயர்வு தாமதமாகலாம். தொழிலில் சிறிதளவே முன்னேற்றம் காண்பீர்கள். மனதில் சிறு குழப்பங்களும் தோன்றி மறையும். அக்கம் பக்கத்துப் பெண்களால் தொல்லை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சிம்மம் : நினைத்தது நிறைவேறும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளின் கனவு நனவாகும். அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம். பொழுதுபோக்கு அதிகமாகும்.

கன்னி: எதிர்பார்த்த விஷயம் நடைபெறும் நாள். திருமண வாய்ப்பு கண்ணுக்குத் தென்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். எதையும் சமாளிக்கும் மனநிலை இருக்கும்.

துலாம்: புதிய தீர்வுகள் புலப்படும் நாள். நேற்றைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும். கடன் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உறவினர்கள் உதவி இனி தேவைப்படாது. நண்பர்கள் மூலம் புதிய நபர்கள் அறிமுகமாவர்.

விருச்சிகம்: எதிலும் கவனம் தேவைப்படும் நாள். எதிர்பார்த்த பணத்தைக் கொடுக்காமல் அவகாசம் கேட்பார்கள். குடும்பத்தில் ஒருவர் மனம் வருந்தும்படி பேசக்கூடும். முயற்சியைத் தீவிரமாக்கிப் பணிகளை முடிப்பீர்கள்.

தனுசு: நன்மைகள் பல நடைபெறும் நாள். உத்தியோகத்தில் புதிய மாறுதல்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலைகளை மனதில் நிறுத்தி எதையும் செய்யுங்கள். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மகரம் : பிரச்சினைகள் தீரும் நாள். கணவன் மனைவி புரிதல் நன்றாக இருக்கும். நண்பர்களின் செயல் நன்மை தரும். பணி சம்பந்தப்பட்ட செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிறு கவலைகள் ஒரு பக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

கும்பம்: நல்ல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும் நாள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். தொழில் திருப்திகரமாக இருக்கும். வாகனப் பராமரிப்பு செலவு கூடும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பணவரவு உண்டு.

மீனம்: கவலைகள் குறையும் நாள். தொழிலில் சீரற்ற நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலத் திட்டங்கள் முடிவாகும். பணியாளர்கள் தன்னிலை விளக்கம் தர வாய்ப்புக் கிடைக்கும். இடர்கள் நீங்கும்.

< Most Related News >

Tags :-14th August Today Raasi Palankal

Related posts

02-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 22 பேர் பலி..!

Tharshi

11-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment