குறும்செய்திகள்

பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம் – தலீபான்கள் ஆட்சியில் பொதுமக்கள் அச்சம்..!

Taliban thrash journalists for covering protests

இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில், தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

ஆனால், இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள்.

இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் மற்றும் கொலை செய்தும் வருகின்றனர்.

இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்துள்ளனர்.

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள், முதுகில் காயம் ஏற்பட்ட அடையாளங்களுடன் எடுக்கபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தலீபான்கள் ஆட்சியில் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Taliban thrash journalists for covering protests

Related posts

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகளும்.. பாதிப்புக்களும்..!

Tharshi

02-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள்..!

Tharshi

Leave a Comment