குறும்செய்திகள்

21-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

21st September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 21.2021

பிலவ வருடம், புரட்டாசி 5, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, பிரதமை திதி நாள் முழுவதும்,
உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்த யோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : மகாளய பட்சம் ஆரம்பம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நலம் நிறையும்.
பரணி: திடீரென்று சுபச்செய்திகள் வந்து சேரும். அமைதியான நாள்.
கார்த்திகை 1: சகோதர, சகோதரிகள் நட்புணர்வுடன் இருப்பார்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வேலைப்பளு குறையும். மனதில் நிம்மதி ஏற்படும்.
ரோகிணி: உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: உறவினர்களால் விரோதத்திற்கு ஆளான நிலை மாறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வீண் செலவுகள் ஏற்படும். மனதில் உற்சாகம் பெருகும்.
திருவாதிரை: பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: வீட்டில் உடனிருப்பவர்களின் பாசம் வெளிப்படையாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
பூசம்: எதிர்பாராத நன்மைகள் வீடு தேடி வரும். நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: வரவு திருப்தி தரும் நாள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் மாறும்.

சிம்மம் :

மகம்: பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாம். செயலில் கவனம் தேவை.
பூரம்: மாற்றுக் கருத்துடையவர்கள் தானாக மனம் மாறுவர்.
உத்திரம் 1: பெற்றோர் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நட்பு வட்டம் விரியும்.
அஸ்தம்: வருமானம் போதுமானதாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: குழந்தைகளால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறலாம்.

துலாம்:

சித்திரை 3,4: அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள்.
சுவாதி: பொதுநல விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
விசாகம் 1,2,3: ஒதுங்கிச் சென்ற ஒப்பந்தம் தானாக வந்து சேரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்க்கைத் துணைக்கு இருந்து வந்த பிரச்னை அகலும்.
அனுஷம்: உடல் நலத்தை சீராக்கும் முயற்சிகள் பலன் தரும்.
கேட்டை: திட்டமிட்ட விஷயம் ஒன்று திசை மாறியதால் நன்மை வரும்.

தனுசு:

மூலம்: திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். கவனம் தேவை.
பூராடம்: தொழில், பணியில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 1: நட்பு பகையாகும்படி உங்கள் கோபத்தை அனுமதிக்காதீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்தாலும் கவனம் தேவை.
திருவோணம்: நினைத்துப்பாராத நபரிடமிருந்து உதவி கிடைத்து மகிழும் நாள்.
அவிட்டம் 1,2: பணி பற்றிய முயற்சி வெற்றி தரும். கலகலப்பான நாள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
சதயம்: அரசியல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலம் உண்டு.
பூரட்டாதி 1,2,3: அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: அமைதியைக் கடைபிடிக்க வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரித்தாலும் மனதில் உற்சாகம் இருக்கும்.
ரேவதி: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

21st September Today Raasi Palankal

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு..?

Tharshi

நாட்டில் மேலும் 2,028 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

17-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment