குறும்செய்திகள்

“கடவுளின் கை” : விண்வெளியில் தோன்றிய ஒளி மூட்டம்..!

Nasa posts image of Hand of God netizens are awestruck

நாசாவின் “சந்திரா எக்ஸ்-ரே வான்” ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.

அது “கடவுளின் கை” (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.

“விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.

Nasa posts image of Hand of God netizens are awestruck

Related posts

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்த ராகுல்..!

Tharshi

திருகோணமலையில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் கைது..!

Tharshi

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை..!

Tharshi

1 comment

Leave a Comment