குறும்செய்திகள்

22-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd October Today Raasi Palankal

அக்டோபர் 22,2022

சுபகிருது வருடம், ஐப்பசி 5 சனிக்கிழமை,
தேய்பிறை துவாதசி திதி மாலை 5:28 மணி வரை,
அதன் பின் திரயோதசி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 2:00 மணி வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31 – 9:00 மணி.
ராகு காலம்: காலை 9:00 – 10:30 மணி.
எமகண்டம்: மதியம் 1:30 – 3:00 மணி.
குளிகை; காலை 6:00 – 7:30 மணி.
சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.
பொது: மகா பிரதோஷம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும்.
கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை அகலும்.
ரோகிணி: வியாபாரத்தில் இருந்த பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள் உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும்.
திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஆதாயமாகும்.
புனர்பூசம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சிம்மம் :

மகம்: குழப்பத்திற்கு இடமளிக்காதீர்கள். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும்.
பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
உத்திரம் 1: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதனால் சிக்கல் வரலாம்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சி இழுபறியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அஸ்தம்: தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண முடியாமல் போகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும்.
சித்திரை 1, 2: பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் சங்கடம் வரலாம். கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.
சுவாதி: பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். செல்வாக்கு உயரும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடன் அடைபடும்.

தனுசு:

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.
பூராடம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவினர் உங்கள் உதவியை எதிர்பார்த்து மீண்டும் வருவர்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: செயல்களில் நெருக்கடி உண்டாகும். உதவி புரிவதாக சொன்னவர்களை சந்திக்க முடியாமல் போகும்.
திருவோணம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
அவிட்டம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமை காப்பது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3, 4: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
சதயம்: தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.
உத்திரட்டாதி: நெருக்கடி விலகும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.
ரேவதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

22nd October Today Raasi Palankal

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

Tharshi

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது..!

Tharshi

T20 விளம்பரக் காணொளியில் இலங்கை அணி நீக்கம் : ரசிகர்கள் கவலை..! (வீடியோ இணைப்பு)

Tharshi

1 comment

Leave a Comment