குறும்செய்திகள்

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எச்சரிக்கை..!

Advisory for women traveling for job abroad

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் மாணவர் வீசாக்கள் மூலம் செல்கின்ற பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக விற்பனை செய்யப்படுவதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதுதொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார பாராளுமன்றில் வைத்து இன்று தெரிவித்தார்.

டுபாய் ஊடாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற இலங்கைப் பெண்கள் இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படுகின்றனர்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருந்த ஓமானில் இயங்கும் இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அதிகரித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advisory for women traveling for job abroad

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவோம் : தினேஷ் குணவர்தன உறுதி..!

Tharshi

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

1000 கோடி சம்பளம் : பிக்பாஸ் 16 வது சீசன் குறித்து மனம் திறந்த சல்மான்கான்..!

Tharshi

Leave a Comment