குறும்செய்திகள்

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இளம்பெண்ணின் அனுபவம்..!

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடு கடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண் ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஃபாத்துமா (Fatumah Najjuma, 29), கனடாவில் கோவிட் காலகட்டத்தில் முன்னணியில் நின்று மக்களைக் காக்க போராடிய ஒரு இளம்பெண்.

ஆனாலும், ஜனவரி 7ஆம் திகதி அவர் தனது சொந்த நாடான உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என திகதி குறிக்கப்பட்டது.

கனடா மக்களுக்காக கோவிட் காலகட்டத்தில் உழைத்த ஃபாத்துமாவுக்கு ஆதரவாக ஒன்லைன் petition ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர் கையெழுத்திட, ஊடகம் ஒன்றில் ஃபாத்துமாவின் கதை வெளியாக, சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவிக்க, கடைசி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஆம், ஃபாத்துமாவுக்கு மனிதநேய அடிப்படையில் நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தன் மூன்று வயது மகளுக்கு தான் மட்டுமே ஆதரவு என்னும் நிலையில், தான் நாடு கடத்தப்பட்டால் மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கலங்கிப் போயிருந்த ஃபாத்துமா, தற்போது நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஆனால், கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பான Migrant Workers Alliance for Change என்னும் அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Syed Hussan.

ஃபாத்துமாவுக்காக ஒன்லைன் petition ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டதாலும், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்ததாலும், அவருடைய நாடு கடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுவரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இதேபோல நடவடிக்கை எடுப்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பும் அவர், இதை முறைப்படுத்த நிலையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார்.

Related posts

01-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மார்ச் 10இல் தேர்தல்…!

Tharshi

நாட்டில் மேலும் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 31 பேர் பலி..!

Tharshi

Leave a Comment