குறும்செய்திகள்

அறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்தேன் : அஸ்வின்..!

அடிலெய்டில் டே-நைட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய பின், அறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்ததாக,  எனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா திணறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி ஸ்மித் உள்பட நான்கு பேரை வீழ்த்தி முத்திரை பதித்தார். உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த அவுஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது.

இந்நிலையில், இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின் அஸ்வின் கூறுகையில்..,

‘‘சுமார் 10 மாதத்திற்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவோம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

லாக் டவுன் காலத்தில் விளையாட்டைப் பற்றி அதிகம் யோசித்தேன். பைத்தியமாக இருந்தேன். அதிகமாக பயிற்சி மேற்கொண்டேன். ஆகவே, இங்கே வந்து பந்து வீசுவதற்கு அது உதவியாக இருந்தது. பிங்க்-பால் டெஸ்டில் விளையாடுவது, பிங் பாலிற்கான புதிய சிந்தனை சிறந்த உணர்வாக இருந்தது.

களத்தில் இறங்கி விளையாடியது சிறந்த உணர்வு. மீண்டும் களம் இறங்கியதை நான் அறிமுக போட்டியாகவே உணர்ந்தேன். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக பந்து வீசினேன். ஸ்மித் விக்கெட் மிகப்பெரியது. அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, முக்கியமான விக்கெட். நான் உற்சாகம் அடைந்தேன்’’ என்றார்.

Related posts

காதலியின் வீடருகே சொகுசு பங்களா வாங்கிய போனி கபூரின் மகன்..!

Tharshi

இரண்டாவது டி20 போட்டி : நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி..!

Tharshi

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..!

Tharshi

4 comments

Leave a Comment