குறும்செய்திகள்

3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்துள்ள அக்‌ஷய் குமார்..!

Akshay Kumar helped 3600 dancers

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் 3600 நடன கலைஞர்களுக்கு, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உதவி செய்துள்ளார்.

கொரோனா முதல் அலையின் போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியவர் அக்‌ஷய் குமார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிவாரண நிதி அளித்துள்ள அக்‌ஷய் குமார், தற்போது 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளதாக, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்‌ஷய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Akshay Kumar helped 3600 dancers

Related posts

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி..!

Tharshi

T20 விளம்பரக் காணொளியில் இலங்கை அணி நீக்கம் : ரசிகர்கள் கவலை..! (வீடியோ இணைப்பு)

Tharshi

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment