குறும்செய்திகள்

02-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

2nd-june-today-raasi-palankal

இன்று ஜூன் 02.2021

பிலவ வருடம், வைகாசி 19, புதன்கிழமை
2.6.2021, தேய்பிறை, சப்தமி திதி காலை 6:26 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 9:59 வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மூத்தோர் ஆரோக்கியம் மேம்படும். திடீர் நட்பு உருவாகலாம்.
பரணி: பிள்ளைகளின் முயற்சியால் பொருளாதார நிலை உயரும்.
கார்த்திகை 1: பணியிட சலசலப்பைப் புன்னகையுடன் சமாளிப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் பெருந்தன்மையான செயல், மதிப்பை பெற்றுத் தரும்.
ரோகிணி: உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்கள் விலகுவர்.
மிருகசீரிடம் 1,2: கண் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னை தீர்ந்து நிம்மதி தரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தடைப்பட்ட முயற்சிகள் நல்லபடியாக முடியும்.
திருவாதிரை: எதையும் முடிவெடுக்க இயலாமல் குழப்பம் ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று அலைபேசியில் வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: வாழ்க்கைத்துணையின் கோபத்தைக் கிளற வேண்டாம்.
பூசம்: அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
ஆயில்யம்: யாரோடும் எந்த வம்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

சிம்மம் :

மகம்: தேவையற்ற எண்ணங்களை விலக்கி நிம்மதி அடைவீர்கள்.
பூரம்: உங்களின் கட்டளையை நிறைவேற்றக் காத்திருப்போர் அதிகரிப்பர்.
உத்திரம் 1: சந்தேகப்படுவதை நிறுத்துவது உங்களுக்கு நன்மை தரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சிலர் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும்.
அஸ்தம்: இழப்புகள் குறையும். பதறாமல் முடிவெடுப்பது நல்லது.
சித்திரை 1,2: அதிகாரிகளைப் பகைக்காமல் வளைந்து கொடுப்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பொழுது போக்கு அம்சங்கள் மகிழ்ச்சி தரும்.
சுவாதி: நல்லவர்களை இனம் காண்பீர்கள். பரபரப்பான நாளாக இருக்கும்.
விசாகம் 1,2,3: தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக மனதில் அலைபாயும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நண்பர்கள் நற்செய்தியை தருவர். பயணம் மகிழ்ச்சி அளிக்கும்.
அனுஷம்: சேமிப்பை உயர்த்தும் முயற்சி நல்ல பலன் தரும்.
கேட்டை: எதிர்பாராத வெற்றிச் செய்தி வந்து வியக்க வைக்கும்.

தனுசு:

மூலம்: பாதியில் விட்டுப்போன முன்னேற்ற முயற்சி மீண்டும் தொடரும்.
பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்கள் உதவுவர்.
உத்திராடம் 1: மனதிடம் காரணமாக நல்ல செயல் ஒன்றை முடிப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தாயின் ஆசையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நிம்மதி பிறக்கும்.
திருவோணம்: திட்டம் ஒன்றை வகுத்து நிறைவேற்ற நாள் பார்ப்பீர்கள்.
அவிட்டம் 1,2: முயற்சியின் பேரில் பணம் வரும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தை வெற்றிகரமாக நடத்தி சென்று நிம்மதியடைவீர்கள்.
சதயம்: மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் சற்றுக் குறைவாகக் கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: மனதில் உற்சாகம் பெருகும். விலகிச் சென்றவர்கள் வருவார்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: சக ஊழியர்களுக்கு உங்களின் ஆலோசனை உதவும்.
உத்திரட்டாதி: பண முடக்கம் நீங்கும். புதிய பாதை தென்படும்.
ரேவதி: கடுமையான முயற்சியால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

2nd June Today Raasi Palankal

Related posts

Xbox One to launch in China this month after all

Tharshi

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

Tharshi

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment