குறும்செய்திகள்

05-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

5th June Today Raasi Palankal

இன்று ஜூன் 05.2021

பிலவ வருடம், வைகாசி 22, சனிக்கிழமை
5.6.2021, தேய்பிறை, தசமி திதி காலை 7:55 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் நள்ளிரவு 2:36 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
பரிகாரம் : தயிர்

சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நீண்ட காலமாக எதிர்பார்த்த நற்செய்தி வரும். நண்பர்கள் நன்மை செய்வர்.
பரணி: அரசால் ஆதாயம் உண்டு. செலவுகள் கட்டுப்படும்.
கார்த்திகை 1: சிலருக்கு வெளிநாட்டு வேலை ஏற்கமுடியாதபடி இருக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியில் கடும் முயற்சி செய்தவர்கள் வெற்றி அடைவர்.
ரோகிணி: பெரியோரின் உடல் நிலையைக் கவனிக்க வேண்டும்.
மிருகசீரிடம் 1,2: பிள்ளைகளின் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்பங்கள் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: இரக்க சுபாவம் மேம்படும். ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
திருவாதிரை: உங்களிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் இருப்பார்கள்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் செய்த நன்மைகளுக்கு பதிலுதவிகள் கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.
பூசம்: சிறிதளவு பண வரவு இருக்கும். கடன் தீர வழி கிடைக்கும்.
ஆயில்யம்: பிரச்னை ஒன்று முயற்சியால் முடிவுக்கு வந்துவிடும்.

சிம்மம் :

மகம்: உறவினர்களுடன் இருந்து வந்த உறவு சிறப்படையும்
பூரம்: இது வரை தடைபட்டிருந்த தொழில் சற்றே மேம்படும்.
உத்திரம் 1: குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியிடத்தில் கருத்து மோதல் வராதபடி அனுசரிக்க வேண்டும்.
அஸ்தம்: பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும்.
சித்திரை 1,2: பணிக்காக வெளிநாடு செல்லும் பயணம் தள்ளிப்போகும்.

துலாம்:

சித்திரை 3,4: இழந்த செல்வாக்கை இன்று மீண்டும் பெறுவீர்கள்.
சுவாதி: அரசியல்வாதிகள் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வீர்கள்.
விசாகம் 1,2,3: கலங்கிப்போயிருந்த மனதில் மெல்லத் தெளிவு பிறக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்வு செழிப்பதற்கான யோசனைகள் இன்று கிடைக்கும்.
அனுஷம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு சற்றுத் தள்ளிப்போகும்.
கேட்டை: பிற்காலத்தில் சொத்துகள் கைக்கு வருவது பற்றிய உறுதிப்பாடு வரும்.

தனுசு:

மூலம்: பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீர ஆரம்பிக்கும்.
பூராடம்: பணியாளர்களுக்கு முன்பிருந்த கவலைகள் தீரும்.
உத்திராடம் 1: நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். மகிழ்ச்சி கூடும்.
திருவோணம்: வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும்.
அவிட்டம் 1,2: தம்பதி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சுபநிகழ்ச்சி சம்பந்தமான முயற்சிகள் துரிதமாக நடக்கும்.
சதயம்: சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: உதவிகள் சற்றே தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: சிலருக்குத் தலைமைப் பதவியில் அமரும் வாய்ப்பு வரும்.
உத்திரட்டாதி: பணியார்கள் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பீர்கள்.
ரேவதி: உங்களின் நல்ல நோக்கமும் பலகாலத் திட்டமும் நிறைவேறும்.

5th June Today Raasi Palankal

Related posts

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் திடீர் மாயம் : சிக்கியது வீடியோ ஆதாரம்..!

Tharshi

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

Tharshi

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் : இருவரை தூக்கிலிட்ட ஈரான்..!

Tharshi

Leave a Comment