குறும்செய்திகள்

09-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

9th June Today Raasi Palankal

இன்று ஜூன் 09.2021

பிலவ வருடம், வைகாசி 26, புதன்கிழமை
9.6.2021, தேய்பிறை, சதுர்த்தசி திதி மதியம் 3:00 வரை,
அதன்பின் அமாவாசை திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:00 வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த- சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : விஷ்ணு வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: கூடுதல் முயற்சி எடுப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
பரணி: புதிதாய் அறிமுகமாகும் நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
கார்த்திகை 1: பொதுநல சேவைகள் செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நண்பர்களுக்கு உதவி செய்து நிம்மதி ஏற்படுத்துவீர்கள்.
ரோகிணி: புதியவர்களிடம் அளவுக்கு அதிக நட்பைத் தவிர்க்க வேண்டும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரால் உதவி கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களால் வந்த சிரமம் விலகும்.
திருவாதிரை: குடும்பத்திற்காக சிறு சிறு செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: நல்ல செய்தி வரும். செய்யும் பணி சிறப்படையும்.

கடகம்:

புனர்பூசம் 4: கவுரவம் அதிகரிக்கும்படியான செயல் ஒன்றைச் செய்வீர்கள்.
பூசம்: பாராட்டுக்களை பற்றி அதிக பெருமிதம் கொள்ள வேண்டாம்.
ஆயில்யம்: தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

சிம்மம் :

மகம்: பணியாளர்களுக்கு வேலையில் இருந்த பளு சற்றுக் குறையும்.
பூரம்: அகங்காரம் தலை துாக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
உத்திரம் 1: கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி ஒன்று தேடிவரும்.
அஸ்தம்: பொறுப்பான பணியில் இருப்பவர்கள் பயணம் செல்ல நேரிடலாம்.
சித்திரை 1,2: திருப்தியுடன் செயலாற்றுவதால் சாதகமான பலன் கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: மனதிற்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அதிர்ஷ்டம் கூடும்.
சுவாதி: நன்கு பணி செய்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: எதிர்விளைவுகளை யோசித்து கவனமாக பேசுவது நல்லது..

விருச்சிகம்:

விசாகம் 4: செயல்பாடுகளிலும் பணியிலும் அதிக கவனம் தேவை.
அனுஷம்: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.
கேட்டை: புதிய திட்டத்தில் மாறுதல்கள் செய்து வெற்றி பெறுவீர்கள்.

தனுசு:

மூலம்: ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. சாதனை புரிவீர்கள்.
பூராடம்: சவால்களை முடிப்பீர்கள். சிறு வெற்றி ஒன்று கிடைக்கக்கூடும்.
உத்திராடம் 1: உங்களின் திட்டம் சிறு திருப்பத்துக்குப் பிறகு நிறைவேறும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாக விடாதீர்கள்.
திருவோணம்: எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
அவிட்டம் 1,2: மேலதிகாரியின் உத்தரவை மீற முயற்சிக்க வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நட்பில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.
சதயம்: அலுவலகப் பணியாளர்களுக்கு தேவையற்ற கவலை இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: ஈடுபாடு காரணமாகத் தடை தாண்டி முயற்சி செல்லும்.

மீனம்:

பூரட்டாதி 4: புதிய செலவுகள் உண்டாகலாம். விரும்பிய மாற்றம் வரும்.
உத்திரட்டாதி: வெளிச்சமான சூழ்நிலை உருவாகி மனம் மகிழும்.
ரேவதி: மன நிறைவுக்காகக் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

9th June Today Raasi Palankal

Related posts

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

Tharshi

27-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment