குறும்செய்திகள்

20 வயது இளைஞனுடன் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா..!

Anushka shrouded in controversy

அனுஷ்கா தற்போது 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.

முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் சைலன்ஸ் படம் வந்தது. அனுஷ்காவுக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஏற்கனவே பிரபாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தொழில் அதிபரை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்தார். ஜாதகத்தில் திருமண தடைகள் இருப்பதாக கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அனுஷ்கா, 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Anushka shrouded in controversy

Related posts

இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் : இன்று ஆரம்பம்..!

Tharshi

13-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

முதல் மூன்று மாதங்களில் திருமணமான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்..!

Tharshi

Leave a Comment