குறும்செய்திகள்

11.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

11th August Today Raasi Palankal | இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: நிம்மதி அளிக்கும் நாள். நீண்ட நாளாக இழுத்து வந்த சுபபலன் உண்டாகும். அலுவலகப் பணிகளை மன திருப்தியுடன் செய்வீர்கள். புகழ் பெற்றவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

ரிஷபம் : கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான நாள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் திருப்பங்கள் ஏற்படும். பழைய முதலீடு லாபமாகும்.

மிதுனம் : உங்கள் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும் நாள். பெற்றோரின் பாராட்டுக் கிடைக்கும். பல காலம் தெரியாத ரகசியங்கள் தெரிய வரும். அலைந்து முடிக்க வேண்டியவை சுலபமாக முடியும்.

கடகம்: இயல்பான நாள். குடும்பத்தினர் கோபத்தை துாண்டலாம். கனிவாக பேசி பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் இடையே வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் மகிழ்ச்சிகரமாக நேரம் செல்லும்.

சிம்மம் : கூடுதலாக பணியாற்ற வேண்டி வரும் நாள். வியாபாரத்தில் ஆர்டர்கள் கிடைக்கப் பாடுபட வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் கடினமான பணிகளை எளிதாக செய்து முடிப்பார்கள்.

கன்னி: இக்கட்டான நாள். யாரையும் நம்பி ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நீங்களே செய்வது நலம். மற்றவரின் பொருளுக்கு ஆசைப்படுவது ஆபத்து. தீய நட்பை விட்டு விலகுங்கள்.

துலாம்: கவனமான நாள். எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சந்திப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு மனம் புழுங்குவீர்கள். சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.

விருச்சிகம்: சீரான நாள். விமர்சனங்களை ஏற்றுப் புன்னகைப்பீர்கள். பணியிடத்தில் செயல் திறமையால் பாராட்டுக் கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்பை பெறுவர். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

தனுசு: மகிழ்ச்சியான நாள். வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். குழந்தைப் பேறு மகிழ்ச்சி தரும். அலுவலக வேலைகளில் அலட்சியம் வேண்டாம்.

மகரம் : நிம்மதியான நாள். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகள் வரும். சிரமங்களுக்கு இடையே பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பார்கள். சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கும்பம்: சந்தோஷமான நாள். பணிச்சுமை அதிகரிக்கும். ஊதியம் போதாது என்ற எண்ணம் மேலோங்கும். சோம்பலினால் முயற்சிகள் குறையும். மகிழ்ச்சி அளிக்கும் செலவுகள் கூடும். விவசாயிகளுக்கு நன்மை உண்டு.

மீனம்: பொறுப்பு கூடும் நாள். கலைத்துறையில் எதிர்ப்புகள் விலகும். உறவினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். சில மனக்குறைகள் முடிவுக்கு வரும். பணியாளர்கள் புதிய வேலைகளை ஏற்க நேரிடும்.

< Most Related News >

Tags :-11th August Today Raasi Palankal

Related posts

நாளை முதல் ரயில் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

Tharshi

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு..!

Tharshi

பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்வதா.. இல்லையா.. : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து..!

Tharshi

Leave a Comment