குறும்செய்திகள்

10-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

10th June Today Raasi Palankal

இன்று ஜூன் 10.2021

பிலவ வருடம், வைகாசி 27, வியாழக்கிழமை
10.6.2021, வளர்பிறை, அமாவாசை திதி மாலை 4:51 வரை,
அதன்பின் பிரதமை திதி, ரோகிணி நட்சத்திரம் மதியம் 12:29 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : சூரிய கிரகணம், அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மனதில் திருப்தி ஏற்படும். வங்கியின் உதவி கிடைக்கும்.
பரணி: முயற்சியில் வெற்றி கிடைக்கும். திறமைக்குரிய பலனை பெறுவீர்கள்.
கார்த்திகை 1: சிறிய அளவில் உபாதை ஒன்று ஏற்பட்டு விரைவில் சரியாகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நிதி சம்பந்தமாக வெற்றி உண்டு. முக்கிய விருப்பம் ஈடேறும்.
ரோகிணி: வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: எண்ணம் ஒன்று ஈடேறும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்ப நண்பர் ஒருவரால் சிறு நன்மை உண்டாகும்.
திருவாதிரை: குடும்பத்தில் நன்மைகள் உண்டாக அக்கறை எடுப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிரமங்கள் சிறு மனஅழுத்தத்திற்கு பிறகு விலகும்.

கடகம்:

புனர்பூசம் 4: பணியில் இருந்த இழுபறி, அலைச்சல் போன்றவை நீங்கும்.
பூசம்: பல முறை முயன்ற விஷயம் ஒன்று நல்லபடியாக நிறைவேறும்
ஆயில்யம்: குடும்ப விஷயத்தில் இருந்த வீண் அலைச்சல் குறையும்.

சிம்மம் :

மகம்: எடுத்த விஷயத்தைச் செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.
பூரம்: தேவையற்ற வீண் மனக்கவலை உண்டாகும். கவனம் தேவை.
உத்திரம் 1: யாருடனும் கருத்து வேற்றுமை இன்றி அனுசரிப்பது நல்லது.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.
அஸ்தம்: விருப்பங்கள் நிறைவேறும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும்.
சித்திரை 1,2: குடும்பத்திற்குள் இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும்.

துலாம்:

சித்திரை 3,4: முயற்சிகள் வெற்றியடைய பாடுபட்டது வீண் போகாது.
சுவாதி: பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த பயங்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: உறவினர்கள், நண்பர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

விருச்சிகம்:

விசாகம் 4: கவனம் சிதறாதபடி செயல்பட்டால் பிரச்னை ஏற்படாமல் தப்பலாம்.
அனுஷம்: முயற்சி செய்த விஷயங்களில் தாமதம் ஏற்படக்கூடும்.
கேட்டை: பலகாலம் மனதை அரித்த பிரச்னை ஒன்று தீரும். நிம்மதி வரும்.

தனுசு:

மூலம்: பணியின்போது செயல்பாடுகளில் அதிகக் கவனம் தேவை.
பூராடம்: பின் வரும் பிரச்னைகளை முன்னரே தெரிந்து விலகுவீர்கள்.
உத்திராடம் 1: உற்சாகமாக செயல்பட்டுப் பணிகளை நன்கு முடிப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள்.
திருவோணம்: புதிய விஷயங்களில் ஈடுபாடு காட்டி அதைக் கற்பீர்கள்.
அவிட்டம் 1,2: அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: அரசியல்வாதிகள் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள்.
சதயம்: தடைப்பட்ட விஷயம் ஒன்று நல்லபடியாக நடைபெறும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் நம்பிக்கை வைத்தவர்கள் ஆதரவு தருவார்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்த மோதல் நீங்கும்.
உத்திரட்டாதி: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும்.
ரேவதி: மன நிறைவான நாள். எப்போதோ செய்த முயற்சி இன்று வெற்றி தரும்.

10th June Today Raasi Palankal

Related posts

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 82 பேர் பலி..!

Tharshi

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Tharshi

மீண்டும் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் : பிரான்ஷுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

Tharshi

Leave a Comment