குறும்செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி : பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை..!

Money laundering in the guise of police officers

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி பணமோசடியொன்று நடைபெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு, பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Money laundering in the guise of police officers

Related posts

T20 விளம்பரக் காணொளியில் இலங்கை அணி நீக்கம் : ரசிகர்கள் கவலை..! (வீடியோ இணைப்பு)

Tharshi

சச்சின் டெண்டுல்கரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற மீராபாய் சானு..!

Tharshi

5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி அறிமுகமாகியுள்ள கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Tharshi

Leave a Comment