குறும்செய்திகள்

கடன் சுமையில் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கித் தவிக்கும் முன்னணி நடிகர்..!

Tamil cinema Actor Gossip

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவர் கடன் சுமையில் இருக்கிறாராம்.

அதாவது, தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது.., சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம்.

கொரோனா காலம் மட்டும் வராமல் போயிருந்தால், அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பாராம். இப்போது படங்கள் முடங்கி கிடப்பதால், கடன் வளர்ந்து நிற்கிறதாம்.

அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு நிறுவனம், “அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பேசி இருக்கிறார்களாம்.

நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் ஒரேயொரு வழி என ஒப்புக் கொண்டுள்ளாராம்.

Tamil cinema Actor Gossip

Related posts

வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!

Tharshi

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது..!

Tharshi

ஐபோன் 13 சீரிஸ் மாடல் : அசத்தல் போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன்..!

Tharshi

Leave a Comment