குறும்செய்திகள்

17-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

17th June Today Raasi Palankal

இன்று ஜூன் 17.2021

பிலவ வருடம், ஆனி 3, வியாழக்கிழமை, 17.6.2021,
வளர்பிறை, சப்தமி திதி மாலை 6:20 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, பூரம் நட்சத்திரம் இரவு 7:03 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : குருவாயூரப்பன் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உங்களிடம் யாரும் கோபப்படமுடியாதபடி நடந்து கொள்வீர்கள்.
பரணி: தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பதால் நன்மை வரும்.
கார்த்திகை 1: நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் சச்சரவு வேண்டாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: செல்வாக்கு மேலோங்கும். உற்சாக மன நிலை நிலவும்.
ரோகிணி: பிரியமுள்ளவர்கள் கோபம் தீர்ந்து உங்களுடன் வந்திணைவார்கள்.
மிருகசீரிடம் 1,2: நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்கள் பேச்சுவார்த்தையில் அனுபவ அறிவு வெளிப்படும்.
திருவாதிரை: உறவினர்களுடன் இருந்த சில்லறை சண்டைகள் சரியாகும்.
புனர்பூசம் 1,2,3: முந்தைய முயற்சி ஒன்றின் விளைவாக நன்மை ஏற்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களுக்கு கீழ்பணிபுரிவோர் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
பூசம்: பயம் நீங்கும். நிதானமாகப் பேசினால் பிரச்னை வராது.
ஆயில்யம்: நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் அகலும்.

சிம்மம் :

மகம்: கடன் தொகை செலுத்தமுடியாபதபடி ஏற்பட்ட சிறு சிரமம் நீங்கும்.
பூரம்: அக்கம்பக்கத்தினருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்
உத்திரம் 1: மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வருத்தங்கள் நீங்குவதால் மனதிலும் செயலிலும் கலகலப்பு வரும்.
அஸ்தம்: பக்தியுணர்வு அதிகரிக்கும். கணவருக்குப் பணவரவு உண்டு.
சித்திரை 1,2: பணியில் நேர்மையான உழைப்பால் பாராட்டுப் பெறுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
சுவாதி: நண்பர்களுக்கு இடையே இருந்த மனத்தாங்கலை நீக்குவீர்கள்.
விசாகம் 1,2,3: வீடு வாங்குவதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பலநாட்கள் நீடித்த சண்டை நீங்கும். குடும்பத்தில் கலகலப்பு வரும்.
அனுஷம்: அக்கம்பக்கத்தினருக்கு உதவிகரமாக இருந்து போற்றப்படுவீர்கள்.
கேட்டை: சந்தோஷம் தரும் செய்தி காலையிலேயே வந்து சேரும்.

தனுசு:

மூலம்: வருமானம் திருப்தி தரும். சிறிய கனவு ஒன்று நனவாகும்.
பூராடம்: எதிர்ப்புகளை சமாளிக்கும்படியான பயிற்சியும் மனதிடமும் வரும்.
உத்திராடம் 1: மனம்விட்டுப்பேசுவதன் மூலம் மனஸ்தாபம் ஒன்று நீங்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உடல் நலம் குறித்த கவலைகள் ஒரு வழியாக நீங்கும்.
திருவோணம்: நிதானப்போக்கு இருப்பதனால் வெறுப்பு வராமல் கவனமாக இருங்கள்.
அவிட்டம் 1,2: பேச்சினால் பிரச்னையில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

கும்பம்:

அவிட்டம் 3,4: வீண்பழி வராதபடி காத்துக்கொள்ளுங்கள். கவலை குறையும்.
சதயம்: மற்றவர்கள் வம்பில் மறந்தும் தலையிடாதிருந்தால் நல்லது.
பூரட்டாதி 1,2,3: தந்தையின் வாழ்வில் ஒரு நன்மை ஏற்படக்காரணமாவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: செலவுகள் ஏற்பட்டாலும் அவற்றால் சிரமங்கள் இருக்காது.
உத்திரட்டாதி: தாய் மூலம் நன்மைகள் வரும். அவரின் கவலைகள் தீரும்.
ரேவதி: நீண்ட கால நண்பர்கள் உதவுவார்கள். கற்ற கல்வி உதவி செய்யும்.

17th June Today Raasi Palankal

Related posts

டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 100 சதவீத பாதுகாப்பு..!

Tharshi

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Tharshi

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

Tharshi

Leave a Comment