குறும்செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி வீரர்களின் விவரம்..!

BCCI announces playing XI for World Test Championship

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்களின் விவரம் :-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

BCCI announces playing XI for World Test Championship

Related posts

சாலையில் சேகரிக்கும் குப்பைகள் – வீட்டை திறந்தால் கொட்டிக் கிடக்கும் பணம் : அதிர்ச்சிக்குள்ளாக்கிய சகோதரிகள்..!

Tharshi

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று : புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் உருவாகும் சாம்சங் லேப்டாப்..!

Tharshi

Leave a Comment