குறும்செய்திகள்

அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும் : வடகொரிய அதிபர்..!

North Koreas Kim vows to be ready for confrontation with US

ஜோபைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கொள்கை போக்கிற்கு பதிலடியாக வடகொரியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கிம் ஜாங் அன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என இரண்டுக்கும் தயாராக வேண்டும் எனக் கூறியதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுடன் மோதலுக்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என கிம் கூறியதாகவும், நாட்டின் கண்ணியம் மற்றும் நலனை பாதுகாக்கவும் சுதந்திரமான வளர்ச்சி மற்றும் அமைதியான சூழல், நாட்டின் பாதுகாப்பு ஆகியற்றிற்கு இத்தகைய தயார் நிலைகள் மிகவும் அவசியம் என வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரியில் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து புதிய அணுகுமுறையை கையாள்வது குறித்து பணியாற்றி வருகிறது.

எனினும், வடகொரியா விவகாரத்தில் ஜோ பைடனின் கொள்கை என்ன என்பது பற்றி விரிவாக தெரிவிக்கப்படவில்லை.

North Koreas Kim vows to be ready for confrontation with US

Related posts

துளி கூட மேக்கப் இல்லாத ஆல்யா மானசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Tharshi

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுகாதார அமைச்சரின் பதில்..!

Tharshi

Leave a Comment