குறும்செய்திகள்

25-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

25th June Today Raasi Palankal

இன்று ஜூன் 25.2021

பிலவ வருடம், ஆனி 11, வெள்ளிக்கிழமை, 25.6.2021
தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:50 வரை,
அதன்பின் துவிதியை திதி, மூலம் நட்சத்திரம் காலை 7:59 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி.
பொது : குபேரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்பத்தினரை அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.
பரணி: யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வீர்கள்.
கார்த்திகை 1: அக்கம் பக்கத்தினரின் செயல்களால் எரிச்சல் அடையலாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நேற்று இருந்த டென்ஷன் நீங்கி அமைதி ஏற்படும்.
ரோகிணி: பணியாளர்கள் சிலரது எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி வரும்.
மிருகசீரிடம் 1,2: மோதல் போக்கு வேண்டாம். போராடி வெல்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் தாமதம் இன்றி வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதால் பிரச்னை ஏற்படலாம்.
புனர்பூசம் 1,2,3: தனிப்பட்ட காரணங்களால் நட்பில் விரிசல் வரலாம்.

கடகம்:

புனர்பூசம் 4: கருத்து வேறுபாடு தீர நீங்கள் முயன்றால் அதற்கு வாய்ப்புள்ளது.
பூசம்: மூத்தவர்களை அனுசரித்து நடந்து கொண்டு ஆசி பெறுவீர்கள்.
ஆயில்யம்: புதிய நட்புகளை நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

சிம்மம் :

மகம்: பணியிடத்தில் கருத்து வேறுபாடு தோன்றாதபடி அனுசரித்து செல்லுங்கள்.
பூரம்: சற்று அதிகமாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும்.
உத்திரம் 1: அனுபவசாலிகளின் ஆலோசனைப்படி நடப்பது மிகவும் அவசியம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: விலை உயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
அஸ்தம்: அலுவலக நண்பர்களின் உதவியால் உங்கள் நிலை சற்று உயரும்.
சித்திரை 1,2: நல்லவர்களை அடையாளம் காண்பீர்கள். நிம்மதியான நாள்.

துலாம்:

சித்திரை 3,4: பெற்றோருடைய உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
சுவாதி: ஆசிரியர் பணியில் உள்ளவர்களை மதித்து நடக்க வேண்டும்.
விசாகம் 1,2,3: கருணை அதிகரிக்கும். கவர்ச்சி அம்சம் கூடுதலாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: யாரையும் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக நடத்த வேண்டாம்.
அனுஷம்: பொருட்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.
கேட்டை: நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கான அடையாளம் தெரியும்.

தனுசு:

மூலம்: அனுபவசாலிகளின் உதவி ஒன்று கிடைக்கும். கஷ்டம் தீரும்.
பூராடம்: எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறாமல் பதற்றம் ஏற்படலாம்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த கூடுதல் வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: இன்று முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
திருவோணம்: மற்றவர் குறைகளைப் பக்குவமாக சுட்டிக் காட்டுங்கள்.
அவிட்டம் 1,2: எதிலும் கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: இயந்திரம் இயக்கும்போது அதிகக் கவனத்துடன் இருங்கள்.
சதயம்: சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் செய்பவர்கள் பார்ட்னரை நம்பலாம்.

மீனம்:

பூரட்டாதி 4: அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கடுமை காட்ட வேண்டாம்.
உத்திரட்டாதி: பிறரால் பாராட்டப்படுவீர்கள். பெற்றோர் ஆதரவாகச் செயல்படுவர்.
ரேவதி: பணிச்சுமை அதிகரித்தாலும் ஈடுபாட்டுடன் வேலை பார்ப்பீர்கள்.

25th June Today Raasi Palankal

Related posts

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Tharshi

29-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி குறித்த விபரம்..!

Tharshi

Leave a Comment