குறும்செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Coronavirus infection in 31923 new cases in India

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 282 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,01,604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 83,39,90,049 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Coronavirus infection in 31923 new cases in India

Related posts

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் “மாஸ்டர்”..!

Tharshi

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Tharshi

இலங்கையில் நான்காவது கொவிட் அலை ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment