குறும்செய்திகள்

முதன் முதலில் வெப் தொடர் மூலம் இணைந்த ராணா – வெங்கடேஷ்..!

Venkatesh and Rana joining for Rana Naidu Web series

முதன்முறையாக, பிரபல தெலுங்கு நடிகர்களான ராணாவும், வெங்கடேஷும் இணைந்து நடிக்க உள்ள வெப் தொடரை கரண் அன்ஷுமான் இயக்கவுள்ளார்.

ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். “பாகுபலி” படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது.

அந்தவகையில், “ஆரம்பம்”, “இஞ்சி இடுப்பழகி”, “பெங்களூர் நாட்கள்”, “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவ் வெப் தொடரில் ராணாவுடன், அவரது மாமாவும், பிரபல தெலுங்கு நடிகருமான வெங்கடேசும் இணைந்து நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. இந்த வெப் தொடருக்கு “ராணா நாயுடு” என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த வெப் தொடர், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான “ரே டொனோவன்” என்கிற கிரைம் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

இந்த வெப்தொடரை கரண் அன்ஷுமான் இயக்க உள்ளார். இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக தயாராகிறது. தற்போது இத்தொடரில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இத்தொடரின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Venkatesh and Rana joining for Rana Naidu Web series

Related posts

14-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

02-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

25-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment