குறும்செய்திகள்

06-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

6th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 06.2021

பிலவ வருடம், புரட்டாசி 20, புதன்கிழமை,
வளர்பிறை, அமாவாசை திதி மாலை 5:36 வரை,
அதன்பின் பிரதமை திதி, அஸ்தம் நட்சத்திரம் நள்ளிரவு 1:19 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : மகாளய அமாவாசை, நவராத்திரி கொலு வைக்க காலை 9:00 -10:30 மணி

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். யோகம் கூடும்.
பரணி: இதுவரை தடைபெற்றிருந்த நன்மைகள் துரிதமாக நடைபெறும்.
கார்த்திகை 1: சமீபத்தில் குழந்தைகளால் ஏற்பட்ட டென்ஷன்கள் அகலும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று நடைபெறும்.
ரோகிணி: புதிய ஆடை, நகை சேர்க்கை உண்டு. மகிழ்ச்சி கூடும்.
மிருகசீரிடம் 1,2: பணி சம்பந்தமாக வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரலாம்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கலகலப்பான நாள்.
திருவாதிரை: எதிர்பாலினத்தினரால் ஏற்பட்ட பிரச்னை ஒன்று தீரும்.
புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட விஷயங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிர்பாராத சலுகைகளும், அரசு வழி அனுகூலங்களும் உண்டு.
பூசம்: நாளின் முற்பாதியில் செலவும், பிற்பாதியில் நிதி நிலையும் உயரும்
ஆயில்யம்: வீடு மாற்றம், இடமாற்றம் விரும்பத்தக்கதாக அமையும்.

சிம்மம் :

மகம்: கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இது.
பூரம்: குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்னை அவர்களாலேயே தீரும்.
உத்திரம் 1: பெற்றோர் ஆதரவு ஓரளவே கிடைக்கும். பாராட்டு உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: திடீரென்று இடமாற்றமோ, பதவி மாற்றமோ வரலாம்.
அஸ்தம்: வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தாயால் நன்மை வரும்.
சித்திரை 1,2: பணிபுரியும் பெண்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி உண்டு.

துலாம்:

சித்திரை 3,4: முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய நன்மை உண்டு.
சுவாதி: வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் சிறு லாபம் கிடைக்கும்.
விசாகம் 1,2,3: எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வதே நல்லது.

விருச்சிகம்:

விசாகம் 4: தொழில் வளம் சிறக்கும். வீடு வாங்கும் யோகம் வரும்.
அனுஷம்: வரவுகள் திருப்தி தரும். செலவுகளும் சுபச்செலவுகளாக மாறும்.
கேட்டை: தொட்டது துலங்கும். சமீபத்தில் ஏற்பட்ட சிரமம் நீங்கும்.

தனுசு:

மூலம்: இளைஞர்களுக்கு வாகனம் வாங்கும் முயற்சி கைகூடலாம்.
பூராடம்: வீட்டில் மணிவிழா போன்ற விசேஷம் நடைபெற வழிபிறக்கும்.
உத்திராடம் 1: வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நின்ற தொழில் மீண்டும் உயிர்பெற வாய்ப்பு உண்டு.
திருவோணம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரலாம்.
அவிட்டம் 1,2: நீங்கள் திட்டமிட்டு செய்த முயற்சி வெற்றி தரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: திடீர் மாற்றங்கள் வரும். சுபச்செலவு அதிகரிக்கும்
சதயம்: பேச்சில் அவசரம் காட்டிவிட்டு பிறகு வருந்த வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: சிறு தோல்விகளுக்கு துவண்டு போகாமல் முயற்சியுங்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: மற்றவர்கள் பற்றிய வம்புகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
உத்திரட்டாதி: திடீர் நன்மை உண்டு. பங்கு மார்க்கெட் லாபம் தரும்.
ரேவதி: உங்களின் உழைப்பு வீணாகாது. நல்லவர்களின் நட்பு நலம் தரும்.

6th October Today Raasi Palankal

Related posts

பெண்களிடம் எல்லை மீறிய அசல் ஜனனியிடம் செய்த கேவலமான செயல்..!

Tharshi

போலியான கொவிட் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண் கைது..!

Tharshi

புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி அறிமுகம்..!

Tharshi

Leave a Comment