குறும்செய்திகள்

வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு..!

Relaxation of import restrictions on Auto parts and Cosmetics

வாகன உதிரிப்பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணியை மேற்கொள்ளும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (21) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..,

“நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகஸ்ட் 23 அன்று 1,465 பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு, பல முறைப்பாடுகளை பரிசீலித்து 708 தயாரிப்புகள் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

மேலும் இறக்குமதியாளர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்”

எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Relaxation of import restrictions on Auto parts and Cosmetics

Related posts

தோனி – பிரதமர், விஜய் – முதல்வர் : வைரலாகும் போஸ்டர்..!

Tharshi

Who Are the Trade War Losers? Just Look at the Earnings Rolling In

Tharshi

ஷங்கரின் புதிய படத்தில் கை கோர்க்கும் ஆலியா பட்..!

Tharshi

Leave a Comment